செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஆங்கில Vocabulary பயிற்சி-3(Vocabulary related with Parts of body)

ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
இன்றைய பயிற்சியில் மனித உடலின் பாகங்களை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

Body PartsMeaning
Abdomen(அப்டமன் )அடிவயிறு
Ankleகணுக்கால்
Armகை
Armpit(ஆர்ம்பிட்)அக்குள்
Backமுதுகு
Back boneமுதுகெலும்பு
Beardதாடி
Bellyவெளிவயிறு/தொப்பை
Bloodஇரத்தம்
Bonesஎலும்பு
Brainமூளை
Breastபெண்ணினுடைய மார்பு
Bumபின்புறம்/பிட்டம்
Cheekகன்னம்
Chestஆணினுடைய மார்பு
Chinமுகவாய்க்கட்டை/தாடை
collar bone(காலர் போன்)கழுத்து எலும்பு
Earகாது
Eardrumசெவி அறை(உள்காது)
Elbowமுழங்கை
Embryo(எம்ப்ரியோ)கரு
Eyeகண்
Eyeballகண்ணின் கருமணி
Eyebrowபுருவம்
Eyelidஇமை
Fingerவிரல்கள்
Fist(ஃபிஸ்ட்)முஷ்டி
Footபாதம்
Fore headநெற்றி
Gullet(கல்லெட்)தொண்டைக்குழாய்
Gumஈரு
Hairமுடி
Handகை
Headதலை
Heartஇதயம்
Heelகுதிகால்
Hipஇடுப்பு
Index Fingerஆள்காட்டி விரல்
Intestine(இன்டெஸ்டின்)குடல்
Jawதாடை
Jointஇணைப்பு
Kidneysசிறுநீரகம்
Kneeமுழங்கால் மூட்டு
Lapமடி,தொடை
Legகால்
Lipஉதடு
Liverகல்லீரல்
Lock(லாக்)முடிக்கற்றை
Lungsநுரையீரல்
Middle Fingerநடுவிரல்
Molar Teethகடைவாய்ப்பால்
Moustache(முஸ்டாச்)மீசை
Muscleதசை/சதைப்பற்று
Nailநகம்
Navel/Belly buttonதொப்புள்
Neckகழுத்து
Nerveநரம்பு
Noseமூக்கு
Nostril(நாஸ்ட்ரில்)மூக்குத்துவாரம்
Palate( பலேட்)மேல்வாய்
Palmஉள்ளங்கை
Pericardiumஇதயப்பை
Plaitகூந்தல்
Pore(போர்)மயிர்க்கால்
Pulse(பல்ஸ்)நாடி
Ribவிலா எலும்பு
Ring Fingerமோதிர விரல்
Salaiva(ஸலைவா)உமிழ்நீர்
Shoulderதோள்பட்டை
Skinசருமம்/தோல்
Skullமண்டை
Soleஅடிப்பாதம்
Spineமுதுகுத்தண்டு
Spleen(ஸ்ப்ளீன்)மண்ணீரல்
Stomachவயிறு
Templeபொட்டு
Thighதொடை
Throatதொண்டை
Thumbகட்டை விரல்/ கைப் பெருவிரல்
Toeகால் பெருவிரல்
Tongueநாக்கு
Tooth(Teeth)பல்(பற்கள்)
Trachea(ட்ரெகியா)மூச்சுக்குழாய்
Uterusகருவறை
Veinநாளம்
Waistஇடுப்பு/இடை
Whiskers(விஸ்கர்ஸ்)கிருதா(தாடியின் காது பக்கம்)
Wombகருப்பை
Wristமணிக்கட்டு

1 கருத்து:

  1. Hello, நீங்கள் Blog எழுத நினைத்தது நல்ல விஷயம் தான். அதற்கு சொந்தமாக நீங்கள் எழுதுவதை post பண்ண வேண்டும். இப்படி அடுத்தவர் எழுதுவதை copy பண்ணி போட கூடாது. ஒரு post எழுத 3 ஒர் 4 hours ஆகிறது. ஆனால் நீங்கள் கஷ்டப்படாமல் copy & paste பண்ணி போட்டு easy ஆக முடித்து விடுகிறீர்கள். உங்களுக்கு post பிடித்திருந்தால் பிடித்த Blog & post லின்க் கொடுக்கவும். இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். தயவு செய்து என்னுடைய பதிவுகளை copy & paste பண்ணாதீர்கள்.Alredy copy பண்ண பதிவுகளை நாளை காலைக்குள் நீக்கி விடுங்கள் இதை வேண்டுகோளாகவோ அல்லது first warning ஆகவோ எடுத்துக்கொள்ளுங்கள். நாளை காலைக்குள் நீக்கி விட வில்லை என்றால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களை கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை.

    by
    http://tamiltospokenenglish.blogspot.com/

    பதிலளிநீக்கு