திங்கள், 25 அக்டோபர், 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-1

  1. நம்மிடம் ஒருவர் How are you? என்று விசாரித்தால் நாம் Fine, Thank you என்று கூற வேண்டும். அவரை பார்த்து நீங்கள் நலமா? எனக் கேட்க What about you? என்று கேளுங்கள்.
  2. ஒருவரது பெயரை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில்

    1. May I know your good name ? (or)
    2. Your good name please? (or)
    3. What's your name?
    என்று கேட்கலாம்
  3. ஒருவர் உங்களிடம் May I know your good name please? எனக் கேட்டால் I am என்று உங்களது பெயரை இணைத்துக் கூறுங்கள். அத்துடன் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என Nice to meet you (or)Glad to meet you என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்
    Example:
    I am Sunitha. Nice to meet you.
  4. Suppose சந்திப்பின் போது Nice to meet you (or) glad to meet youசொல்ல மறந்து விட்டால் பேசிவிட்டு விடைபெறும் போது Nice meeting you என்று கூறுங்கள்.
  5. வீட்டிற்கு friends வந்திருந்தால் அவர்களை உட்காருங்கள் என்று கூற

    1. Please sit down
    2. Please take your seat
    3. Please be seated
    இவைகளில் ஏதேனும் ஒன்றைக் கூறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக