செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஆங்கில இலக்கணம்-Preposition

  • ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையுடன் இணைக்க preposition பயன்படுகிறது. (Prepositions are words that shows connection between other words).
  • Exampe:"நான் புரியாத பாடம் பற்றி படிக்க மாலையில் ஆசிரியர் வீட்டிற்க்கு சென்றேன்" இந்த வாக்கியத்தில் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் 'பற்றி', படி'க்க', வீட்டிற்'க்கு', மாலை'யில்' போன்றவை preposition ஆகும்.
  • Preposition என்றால் முன்னிடைச்சொல் pre என்றால் 'முன்னால்'position என்றால் 'இடம்' என்று பொருள்
  • Prepositionகள் பெரும்பாலும் Noun க்கு முன்னால் இடம் பெறுகின்றது. எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்கும் போது இந்தியாவிலிருந்து என சொல்ல From India என்று சொல்லலாம். அதே மாதிரி இந்தியாவுக்கு என சொல்ல To India என்று சொல்ல வேண்டும்
In and At:
  • பொதுவாக பெரிய நகரங்களைக் குறிப்பிடும்போது In என்பதையும், சிறிய ஊர்களைக் குறிப்பிடும் போது At என்பதையும் உபயோகிக்க வேண்டும் Example: In Chennai, At Nagercoil
  • காலை, மாலை பற்றி குறிப்பிட In உதவுகிறது
    Example:

    1. In the morning ( காலையில் )
    2. In the evening ( மாலையில் )
    3. In my house ( என்னுடைய வீட்டில் )
  • மாதங்கள் மற்றும் கால நிலைகளை பற்றி பேசும் போது In பயன்படுகிறது. Examle: In January, In December, In April , In spring, In summer,In autumn, In winter
  • At என்பதை இடத்தைப் பற்றி குறிப்பிடவும், நேரத்தைப்பற்றி குறிப்பிடவும் பயன்படுத்தலாம்
    Example :

    1. at Nagercoil (நாகர்கோவிலில்)
    2. at 10'o clock ( 10 மணிக்கு/10 மணியளவில் )
    3. at night ( இரவில் )

அடிக்கடி பேச்சு வழக்கில் use ஆகும் prepositions கீழே Table ல் கொடுக்கப்பட்டுள்ளது. சிரமம் பார்க்காமல் படித்து பேசும் போது பயன்படுத்திக்கொள்ளவும்.
Prepositions
PrepositionMeaning
Atஇல்
Afterபிறகு
Aboutபற்றி
Alongவழியே/ஊடே
Amongமத்தியில்
Amongமத்தியில்
Amongமத்தியில்
Aroundசுற்றிலும்
Againstஎதிராக
Asபோல
Aboveமேலே
Byஆல்/மூலமாக
Beforeமுன்னால்
Belowஅடியில்
Besideபக்கத்தில்
Betweenஇடையில்
Beyondஅப்பால்
Beneathஅடியில்
Exceptதவிர
Inஇல்/உள்ளே
Insideஉட்பக்கத்தில்
Forக்கு/க்காக
Fromஇருந்து
Likeபோல
Ofஉடைய
Onமேலே
Toக்கு
Throughமூலமாக
Towardsநேராக/சார்பாக
Uponமேலே
Underகீழே
Nearஅருகில்
Duringபொழுது
Withஉடன்/ஓடு
Withoutஇல்லாமல்
Withinஉள்/உள்ளே
Prepositions of place
சில prepositions இடத்துடன் தொடர்புடைய செயல்களை குறிப்பிட பயன்படுகிறது. under, underneath, over, inside, beside, in , in front of, on top of, in the middle of போன்றவை இடத்தை பற்றி குறிப்பிட பயன்படுகிறது
Example:
  1. Nivi was sitting under a tree ( Nivi மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தாள்)
  2. There's a woodenfloor underneath the carpet (Carpetக்கு அடியில் மரத்திலான தரை உள்ளது)
  3. Some birds flew over their houses
  4. John and smith were hiding inside the wardrobe.
  5. There was a tree beside the river
  6. I have a friend who lives in Chennai.
  7. A big truck parked in front of their car
  8. The cat jumped on top of the cupboard

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக