செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஆங்கிலத்தில் கேள்வி கேட்க‌ & பதில் சொல்ல‌

ஆங்கிலத்தில் பேசும் பொது நமக்கு வரும் doubt களை கேள்விகளாய் கேட்க கீழே உள்ள short questions i படித்து பேசும் போது use பண்ணி பழகவும்.
  1. அது என்ன?
    What is that?
  2. யார் அது?
    Who is that?
  3. எதற்கு/எதற்காக?
    What for?
  4. எது?
    Which one?
  5. அடுத்தது என்ன‌?
    What next?
  6. ஏன் கூடாது?
    Why not?
  7. ஏன் அப்படி?
    Why so?
  8. எவ்வளவு நேரம்?
    How long?
  9. எவ்வளவு தூரம்?
    How far?
  10. எவ்வளவு?
    How much?
  11. எத்தனை?
    How many?
  12. உனக்குத்தெரியுமா?
    Do you know?
  13. உனக்குத்தெரியாதா?
    Dont you know?
  14. உனக்கு ஞாபகமிருக்கிறதா?
    Do you remember?
  15. உனக்கு ஞாபகமில்லையா?
    Dont you remember?
  16. அது நன்றாக வேலை செய்கிறதா?
    Does it work well?
  17. நீ புகை பிடிப்பாயா?
    Do you smoke?
  18. நீ புகை பிடிப்பதில்லையா?
    Dont you smoke?
  19. உனக்கு coffee பிடிக்குமா?
    Do you like coffee?
  20. உனக்கு coffee பிடிக்காதா?
    Dont you like coffee?
யாராவது உங்களிடம் ஆங்கிலத்தில்questions ஏதாவது கேட்டால் அதற்கு தமிழில் பதில் சொல்வதற்கு பதிலாக கீழே உள்ள பதில்களை பேசும் போது use பண்ணவும்.
  1. ஆமாம்
    Yes
  2. இல்லை
    No.
  3. அவ்வளவுதான்.
    Thats all.
  4. சரி பரவாயில்லை
    Ok. Its all right.
  5. ஒன்றுமில்லை
    Nothing
  6. கவலைப்பட எதுவுமில்லை
    Nothing to worry
  7. நிச்சயமாக‌
    Surely/Certainly
  8. உண்மையில்
    Of course/Indeed
  9. அப்படித்தான் நினைக்கிறேன்.
    I think so
  10. அப்படித்தான் நம்புகிறேன்
    I hope so/I believe so
  11. அப்படித்தான் தெரிகிறது
    It seems so
  12. அப்படித்தான் தோன்றுகிறது.
    It appears so
  13. நான் அப்படி நினைக்கவில்லை
    I dont think so
  14. நான் அப்படி நம்பவில்லை
    I dont believe so
  15. அப்படித் தெரியவில்லை
    It doesn't seem so
  16. அப்படித் தோன்றவில்லை.
    It doesn't appear so.
  17. ரொம்ப மோசம்
    It's too bad
  18. காலம் கடந்து விட்டது
    Its too late.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக