ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
இன்றைய பயிற்சியில் மனித உடலின் பாகங்களை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
Body Parts | Meaning |
Abdomen(அப்டமன் ) | அடிவயிறு |
Ankle | கணுக்கால் |
Arm | கை |
Armpit(ஆர்ம்பிட்) | அக்குள் |
Back | முதுகு |
Back bone | முதுகெலும்பு |
Beard | தாடி |
Belly | வெளிவயிறு/தொப்பை |
Blood | இரத்தம் |
Bones | எலும்பு |
Brain | மூளை |
Breast | பெண்ணினுடைய மார்பு |
Bum | பின்புறம்/பிட்டம் |
Cheek | கன்னம் |
Chest | ஆணினுடைய மார்பு |
Chin | முகவாய்க்கட்டை/தாடை |
collar bone(காலர் போன்) | கழுத்து எலும்பு |
Ear | காது |
Eardrum | செவி அறை(உள்காது) |
Elbow | முழங்கை |
Embryo(எம்ப்ரியோ) | கரு |
Eye | கண் |
Eyeball | கண்ணின் கருமணி |
Eyebrow | புருவம் |
Eyelid | இமை |
Finger | விரல்கள் |
Fist(ஃபிஸ்ட்) | முஷ்டி |
Foot | பாதம் |
Fore head | நெற்றி |
Gullet(கல்லெட்) | தொண்டைக்குழாய் |
Gum | ஈரு |
Hair | முடி |
Hand | கை |
Head | தலை |
Heart | இதயம் |
Heel | குதிகால் |
Hip | இடுப்பு |
Index Finger | ஆள்காட்டி விரல் |
Intestine(இன்டெஸ்டின்) | குடல் |
Jaw | தாடை |
Joint | இணைப்பு |
Kidneys | சிறுநீரகம் |
Knee | முழங்கால் மூட்டு |
Lap | மடி,தொடை |
Leg | கால் |
Lip | உதடு |
Liver | கல்லீரல் |
Lock(லாக்) | முடிக்கற்றை |
Lungs | நுரையீரல் |
Middle Finger | நடுவிரல் |
Molar Teeth | கடைவாய்ப்பால் |
Moustache(முஸ்டாச்) | மீசை |
Muscle | தசை/சதைப்பற்று |
Nail | நகம் |
Navel/Belly button | தொப்புள் |
Neck | கழுத்து |
Nerve | நரம்பு |
Nose | மூக்கு |
Nostril(நாஸ்ட்ரில்) | மூக்குத்துவாரம் |
Palate( பலேட்) | மேல்வாய் |
Palm | உள்ளங்கை |
Pericardium | இதயப்பை |
Plait | கூந்தல் |
Pore(போர்) | மயிர்க்கால் |
Pulse(பல்ஸ்) | நாடி |
Rib | விலா எலும்பு |
Ring Finger | மோதிர விரல் |
Salaiva(ஸலைவா) | உமிழ்நீர் |
Shoulder | தோள்பட்டை |
Skin | சருமம்/தோல் |
Skull | மண்டை |
Sole | அடிப்பாதம் |
Spine | முதுகுத்தண்டு |
Spleen(ஸ்ப்ளீன்) | மண்ணீரல் |
Stomach | வயிறு |
Temple | பொட்டு |
Thigh | தொடை |
Throat | தொண்டை |
Thumb | கட்டை விரல்/ கைப் பெருவிரல் |
Toe | கால் பெருவிரல் |
Tongue | நாக்கு |
Tooth(Teeth) | பல்(பற்கள்) |
Trachea(ட்ரெகியா) | மூச்சுக்குழாய் |
Uterus | கருவறை |
Vein | நாளம் |
Waist | இடுப்பு/இடை |
Whiskers(விஸ்கர்ஸ்) | கிருதா(தாடியின் காது பக்கம்) |
Womb | கருப்பை |
Wrist | மணிக்கட்டு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக