உங்கள் friend அல்லது wife/husband கூட இருக்கும் போது யாரிடமாவது Introduce ஆக வேண்டி இருந்தால் I am sunitha என்று உங்கள் பெயர் சொல்லி Introduce ஆகி விட்டு This is Prem, My friend அல்லது This is Prem,My husband என்று சொல்லி அவர்களையும் Introduce பண்ணி வைக்கவும்.
உங்கள் எதிலிருப்பவர் சொன்ன பெயர் ஒருவேளை உங்களுக்கு கேட்கவில்லை என்றால் I am sorry, I didn't catch your name என்று சொல்லுங்கள். உங்களிடம் யாராவது இப்படி சொன்னால் அவருக்கு புரியும்படி உங்கள் பெயரை நிறுத்தி நிதானாமாக சொல்லவும்.
நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது உங்கள் உறவினரையோ இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் போது அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தால் அவர்களிடம் உங்களுக்கு ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரியுமா எனக்கேட்க Do you know each other? எனக்கேளுங்கள்.
அவர்கள் தெரியும் எனச்சொன்னால் உங்களுக்கு ஒருவரை ஒருவர் எப்படி தெரியும் எனக்கேட்க How do you know each other? எனக்கேட்கலாம்.
உங்களிடம் ஒருவர் உங்களுடன் படித்த ஒருவரை தெரியுமா எனக் கேட்டால் Ya, We know each other. We were at school together என்று சொல்லலாம். உங்களுடன் வேலை பார்க்கும் ஒருவரை தெரியுமா எனக்கேட்டால் Ya. We work together. அல்லது We used to work togetherஎனச்சொல்லலாம். நண்பர்கள் மூலமாக தெரியும் எனச்சொல்ல We know each other through friends எனச்சொல்லலாம்.
Person1 | Person2 & Person 3 |
My name is Charli | I am Sunitha. This is Prem, My husband |
| I am Sunitha. This is Prem, My friend |
I am sorry, I didn't catch your name |
|
Do you know each other? | Ya we know each other |
How do you know each other? | We work together |
| We used to work together |
| We were at school/college together |
| We travelled together |
| through friends |
Nice to meet you |
|
Pleased to meet you
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக