ஆங்கில இலக்கணம்-Auxiliary Verbs
- Auxiliary verbs என்பது துணை வினைச் சொற்கள்.
- ஒரு வாக்கியத்தில் கண்டிப்பாக ஒரு Main verb அல்லது Auxiliary verb இருக்க வேண்டும்.
- Auxiliary verbs are used together with a main verb to give grammatical information and therefore add extra meaning to a sentence, which is not given by the main verb.
- Example:
1. ராமன் ஓடினான்(Raman ran) இதில் ஒடினது ஒரு செயல் அதனால் ran (past tense of run)என்ற main verb பயன்படுத்த வேண்டும்.
2. நான் ஒரு doctor( I am a doctor). என்று என்னுடைய நிலையை பற்றி குறிப்பிடும் போது am என்ற auxiliary verb பயன்படுத்த வேண்டும்.
3.புதிதான பழங்கள் (fruits are fresh) என்று பழங்களின் நிலையைப் பற்றி சொல்லும் போது are என்ற auxiliary verb பயன்படுத்த வேண்டும். - So செயல்களைப் பற்றிக் குறிப்பிட Main verb களைப் பயன்படுத்த வேண்டும். நிலை/தன்மை களைப் பற்றிக் குறிப்பிட Auxiliary verb களைப் பயன்படுத்த வேண்டும்.
Types of Auxiliary Verbs:
- Be verbs
- do verbs
- have verbs
- Modal verbs
1.Be verbs:
- Be என்றால் இரு என்று பொருள்.
- ஆங்கிலத்தில் மொத்தம் 7 Be verbs
am , is , are , was , were , will be , shall be - காலங்களுக்கு ஏற்ற மாதிரி be verbs பயன்படுத்தப்படும்.
Tense | Auxiliary Verbs |
Present tense | am , is , are |
Past tense | was , were |
Future tense | Will be , shall be |
- ஆங்கிலத்தில் மொத்தம் 7 subject கள் உள்ளன. I , We, You, He , She , It , They
- Subject க்கு ஏற்றவாறு Auxiliary verb களை 3 காலங்களிலும் பயன் படுத்துவதை பார்க்கலாம் .
Present Tense | Past Tense | Future Tense |
I am | I was | I shall be |
We are | We were | We shall be |
You are | You were | You will be |
He is | He was | He will be |
She is | She was | She will be |
It is | It was | It will be |
They are | They were | They will be |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக