செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஆங்கில இலக்கணம்-Adjective

  • Adjective என்பது பெயர்ச்சொல்லை சிறப்பிக்கும் சொல்
  • Noun and Pronouns சிறப்பித்து சொல்ல Adjective பயன்படுகிறது.
  • Adjective மக்கள், இடங்கள் ,பொருட்கள் இவற்றை பற்றி விரிவாக சொல்ல உதவுகிறது.
    Example:
    (1) Good Boy (2) Beautiful Car (3) Bad Weather.

    இதில் Boy, Car Weather என்பது Noun ஆகும். Good, Beautiful and Bad ஆகியவை Adjective ஆகும். அவை Noun பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்கிறது.
  • (ie) Adjectives describe nouns and pronouns. They give you more information about
    people, places, and things.

Types of Adjectives:
  • சில Adjectives நிறங்களை பற்றி கூறுகிறது.(Some adjectives tell about the color of things.)
    Example:

    (1)a red carpet (2)a gray suit (3)a brown bear
    (4)a white swan (5)an orange balloon (6)green peppers
  • சில Adjectives மனிதன் அல்லது பொருட்களின் size பற்றி கூறுகிறது. (Some adjectives tell about the size of people or things.)
    Example:

    (1)a big house (2)a long bridge (3)tiny feet
    (4)a large army (5)a high mountain (6)big hands
  • சில Adjectives மனிதன் அல்லது பொருட்களின் quality பற்றி கூறுகிறது. (Some adjectives tell what people or things are like by describing their quality.)
    Example:

    (1)a handsome boy (2) an old uncle (3)a hot drink
    (4)a poor family (5)a kind lady (6)a cold winter
  • சில Adjectives பொருட்கள் எதனால் ஆனது என்பதை பற்றி சொல்கிறது. அது substances ஆகும் (Some adjectives tell what things are made of. They refer to substances.)
    Example:

    (1)a plastic folder (2)a stone wall (3)a paper bag
    (4) a metal box (5)a glass door (6) a silk dress
  • சில Adjectives இடங்களை வைத்து பொருட்களை அல்லது மக்களை கூறும். அது adjectives of origin எனப்படும் (Some adjectives are made from proper nouns of place. These adjectives are called adjectives of origin.)
    Example:

    (1)a Mexican hat (2)a British police officer (3)an American custom
    (4)Washington apples (5)an Indian temple (6)an Italian car

The Order of Adjectives
  • சில நேரம் ஒரு noun அல்லது pronoun பற்றி சொல்ல 2 அல்லது 3 Adjectives use ஆகும். அப்போது Adjectives i "size, quality, color,origin, substance" என்ற order ல் போடவும்
    Example:
(1)a small green plastic box
size color substance
(2)a stylish red Italian car
quality color origin

Commonly Used Adjectives:
  • மக்கள், இடங்கள் ,பொருட்கள் இவற்றுடன் பொதுவாக பேச்சு வழக்கில் use ஆகும் Adjectives கீழே உள்ள Table ல் உள்ளது. இதை 2 அல்லது 3 தரம் படித்து பேசும் போது use பண்ணி பழகவும்.

    Adjective related with Person
    Affectionateபாசமுள்ள‌
    Arrogantகர்வமான‌
    Adamantபிடிவாதமான‌
    angryகோபமாக‌
    Braveதைரிய‌மான‌
    Cleverபுத்திசாலியான‌
    Dangerousஆபத்தான‌
    deadஇறந்த
    Efficientதிறமையான‌
    Fairஅழகான‌
    Famousபுகழ்வாய்ந்த‌
    Generousதாராள‌மான
    Gentleமேன்மையான
    Helpfulஉதவிகர‌‌மான
    Honestநேர்மையான
    hungryபசியாக
    Indifferentஅலட்சியமான‌‌
    Innocent‌வெகுளியான
    Jealousபொறாமையான
    Kindஅன்பான‌
    Lavishஊதாரித்தனமாக
    Mischievousகுறும்புத்தனமான‌
    Miserlyகருமித்தனமான
    Notoriousதீயவைகளில் பிரபலமான‌
    Humorousநகைச்சுவையான
    Politeபணிவான‌
    Proudபெருமிதமான‌
    Plainவெளிப்படையான
    Quietஅமைதியான
    roughகடினமான
    responsibleபொறுப்பான
    reliableநம்பிக்கையான
    Sensitiveஉணர்ச்சிவசப்படும்
    Short temperedமுன் கோபம் கொண்ட
    Sincereஉண்மையுள்ள‌
    Selfishசுயநலமான
    Strictகண்டிப்பான
    Straight forwardஒளிவு மறைவற்ற
    Sensibleஅறிவுள்ள‌
    Suspiciousசந்தேகத்திற்கிடமான
    Talentedபுத்திசாலியான‌/திறமையான
    Timidதைரியமில்லாத/கோழைத்தனம்
    tiredகளைப்பாக
    thirstyதாகமாக
    Uselessஉபயோகமற்ற
    Usefulஉபயோகமான
    Violentகொடுமையான
    Well educatedநன்கு படித்த
    Weakமெலிந்த
    Well offவசதியுள்ள

  • இடங்கள் பற்றி குறிப்பிடும் Adjectives

    Adjective related with Place
    Narrowகுறுகலான‌
    Broadஅகலமான
    Crowdedகூட்டம் நிறைந்த
    Congestedநெரிசலான
    Cleanசுத்தமான
    Smoothமென்மையான
    Waterloggedதண்ணீர் தேங்கிய
    Slushyசேறும் சகதியுமாக
    Slipperyவழுக்கலாக
    Unevenசமமில்லாமல்

  • வீட்டைப்பற்றி குறிப்பிடும் Adjectives.

    Adjective related with House
    Airyகாற்றோட்டமான
    Brightவெளிச்சமான
    Big and spaciousபெரிய விசாலமான
    Convenientவசதியான
    Dilapilatedபாழடைந்த
    Remoteதொலைவில்‌
    Well ventilatedகாற்றோட்டமான
    Stuffyஅடைசலான ‌
    Untidyஒழுங்கற்ற
    Spick and spanசுத்தமாக
    Vacantகாலியாக

  • பொருட்கள் பற்றி குறிப்பிடும் Adjectives.

    Adjective related with Things
    AdjectiveMeaning
    Freshபுதிதான
    Frothyநுரைத்த/நுரை நிறைந்த
    Rottenஅழுகிய
    Sourபுளிப்பான
    Dirtyஅழுக்காக
    Dryஉலர்ந்த
    Costlyவிலை அதிகமாக
    Saltyஉவர்ப்பாக
    Tenderஇளசான
    Thinமெலிந்த
    Murkyகலங்கலாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக