செவ்வாய், 26 அக்டோபர், 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-8

இன்றைய Tips ல் புதிதாக சந்திக்கும் நபரிடம் அவர் எங்கிருந்து வருகிறார், எங்கு வசிக்கிறார்,யாருடன் இருக்கிறார், அவருடைய contact details கேட்பது பற்றி பார்க்கலாம்.
  1. நீங்கள் யாரிடமாவது அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்க அதாவது அவர்களுடைய native place பற்றி கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. Where are you from?
    2. Where do you come from?
    3. Whereabouts are you from?
    யாராவது உங்களிடம் Where are you from? என்று கேட்டால் I am from India. (or) I am from Nagercoil என்று நீங்கள் எங்கிருந்து வருகிறீர்களோ அதைச் சொல்லவும்
  2. நீங்கள் ஒருவரிடம் Where are you from? என்று கேட்டு அவர் I am fromAmerica. என்று சொல்கிறார். America வில் எங்கே என்று கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. What part of America do you come from?
    2. Whereabouts in America are you from?
  3. நீங்கள் இப்பொழுது எங்கே வசிக்கிறீர்கள் எனக் கேட்க Where do you live? என்று கேட்கலாம் யாராவது உங்களிடம் Where do you live? என்று கேட்டால் நீங்கள் தற்பொழுது வசிக்குமிடத்தை கீழே உள்ள முறைகளில் சொல்லலாம்

    1. I live in London.
    2. I live in Oxford near London
    3. I am originally from India now live in London
    4. I was born in India but grew up in England
  4. நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள் என்று கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. Who do you live with?.
    2. Do you live with anybody?
    நான் கணவருடன் இருக்கிறேன் என்று சொல்ல I live with my husbandஅல்லது பெற்றோருடன் இருக்கிறேன் என்று சொல்ல I live with my parentsஅல்லது friends கூட இருக்கிறேன் என்று சொல்ல I live with my friends என்று சொல்லலாம். தனியாக வசிக்கிறேன் என்று சொல்ல I live on my own.என்று சொல்லலாம்
  5. நீங்கள் தனியாகவா வசிக்கிறீர்கள் என்று கேட்க Do you live on your own? என்று கேட்கலாம். யாராவது Do you live on your own? என்று உங்களிடம் கேட்டால்
    1. தனியாக இருக்கிறேன் என்று சொல்ல I live on my own
    2. இன்னொருவருடன் share பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல Ishare with one other person
    3. >இன்னும் 3 பேருடன் share பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல Ishare with three others
  6. யாரிடமாவது phone number அல்லது address கேட்க What's your phone number?/What's your address? என்று கேட்கலாம். இதையே பணிவாக கேட்கCould I take your phone number?/Could I take your address? என்று கேட்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக